'சித்திரவதை முகாமிலிருந்த 'தலையாட்டி' அமைச்சரே..! " சபையில் வெடித்த சர்ச்சை


 
பதுளை பொரலந்தலவில் காணப்பட்ட சித்திரவதை முகாமின் பின்னணியில், தற்போதை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளார் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

 இப்போது பட்டலந்த தொடர்பில் கதைக்கின்றனர். பதுளை பொரலந்தலவிலும் சித்திரவதை முகாமொன்று இருந்தது. அங்கு இருந்த ஆட்காட்டும் தலையாட்டி பொம்மையார்?

இந்த அரசாங்கத்தின் அமைச்சரே இருந்துள்ளார். பெரும் சித்திரவதைகளை செய்த முகாமாகும். அங்கு இருந்த தலையாட்டி பொம்மை அரசாங்கத்தில் இருக்கின்றது.

பட்டலந்தவால் நீங்களே பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக்கொண்டுள்ளீர்கள்.
இந்த அரசாங்கத்ததால் ரணில் விக்கிரமசிங்க,மகிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்கவின் ஒரு முடியையேனும் அசைக்க முடியாது.

பட்டலந்த தொடர்பான யோசனையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தாலும் இதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை.

 அதிகாரிகளை கைதுசெய்யும் இந்த அரசாங்கம் அமைச்சர்களை கைது செய்வதில்லை. திமிங்கிலங்களை விட்டுவிட்டு நெத்தலி மீன்களையே இந்த அரசாங்கம் பிடிக்கின்றது. இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் சாமர சம்பத் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். மற்றையவர்களான பிள்ளையான்,
வியாழேந்திரன் மற்றும் மேர்வின் சில்வாஆகியோர் தோல்வியடைந்தவர்கள். அவர்களை விடுத்து வேறு அதிகாரம் கொண்டஎவரையும் கைது செய்ய முடியவில்லை.